1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 17 மே 2018 (07:42 IST)

பிளஸ் 2 தேர்வில் தற்கொலை செய்து கொண்ட நெல்லை மாணவரின் மதிப்பெண்கள்

தந்தையின் குடிப்பழக்கத்தால் மனம் நொந்து போன நெல்லை மாணவர் தினேஷ் என்பவர் கடந்த 2ஆம் தேதி நெல்லை அருகே உள்ள பாலம் ஒன்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த மாணவர் பிளஸ் 2 தேர்வில் 1024 மதிப்பெண்கள் எடுத்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. 
 
தந்தை குடிப்பழக்கத்தால் தனது குடும்பம் வறுமையில் வாடுவதாகவும், தனது குடும்பம் போன்று பல குடும்பங்கள் சீரழிந்து கொண்டிருப்பதை தடுக்க டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கையாக கடிதம் எழுதி வைத்து நெல்லை மாணவர் தினேஷ் தற்கொலை செய்து கொண்டார். இந்த மாணவரின் மரணம் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் இதே போன்று இன்னொரு உயிர் போய்விடக்கூடாது என்பதால் உடனடியாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் வழக்கம்போல் தமிழக அரசு எதிர்க்கட்சிகளின் இந்த கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை
 
இந்த நிலையில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வில் நெல்லை மாணவர் தினேஷ் 1024 மதிப்பெண்கள் எடுத்திருப்பதாக அவரது குடும்பத்தினர் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர். அவர் பெற்ற மதிப்பெண்கள் இதோ:
 
தமிழ்  - 194
ஆங்கிலம் - 148
இயற்பியல் - 186
வேதியியல் - 173
உயிரியல் - 129
கணிதம் - 194
மொத்தம் - 1024
 
இவ்வளவு மதிப்பெண்கள் பெற்ற மாணவர் தற்போது உயிருடன் இல்லை என்பது அவரது குடும்பத்திற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்திற்கே ஒரு பெரிய இழப்பாக கருதப்படுகிறது