வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 20 ஜூன் 2017 (16:21 IST)

ரஜினிக்கு 4 கேள்விகள்.. பதில் கூறுவாரா? - சீண்டும் சுப.உதயகுமார்

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி சமூக ஆர்வலரான சுப. உதயகுமார் தனது முகநூல் பக்கத்தில் சில கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:


 

 
திரு. ரஜினிகாந்த் அவர்களின் கட்சியில் இணைகிறேன்!
 
1. ஒரு வெற்றுத் தமிழக வரைபடத்தில் தமிழ் நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் திரு. ரஜினிகாந்த் அவர்கள் சரியாக அடையாளப்படுத்துவாரா?
 
2. நெடுவாசல், வடகாடு, கதிராமங்கலம், திட்டக்குடி போன்ற ஊர்கள் பற்றி ஐந்து, ஐந்து வரிகள் எழுதித் தருவாரா?
 
3. எங்கள் இடிந்தகரைப் பள்ளி மாணவி ஒருவரோடு கூடங்குளம் அணுமின் திட்டம் பற்றி ஐந்து நிமிடம் ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் விவாதிப்பாரா?
 
4. கெய்ல், என்.பி.சி.ஐ.எல்., ஓ.என்.ஜி.சி., மாப்ஸ், ஐ.என்.ஓ. இவையெல்லாம் என்னவென்று சொல்லி, இரண்டிரண்டு வாக்கியங்கள் பேசுவாரா?
 
இவற்றைச் செய்தால், அவரும், ஆண்டவனும் சேர்ந்து துவங்கப்போகும் கட்சியில் இணைந்திட அணியமாய் இருக்கிறேன் நான்” என அவர் குறிப்பிட்டுள்ளார். 
 
இவரின் இந்த பதிவு ரஜினி ரசிகர்களை கொந்தளிக்க செய்துள்ளது. எனவே, அவரின் கருத்துக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.