ஞாயிறு, 10 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (16:01 IST)

நெல்லையில் மாணவர்கள் இடையே சாதி ரீதியிலான மோதல்.. ஆதிதிராவிட மாணவன் காயம்..!

நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளியில் மாணவர்களிடையே ஜாதி ரீதியிலான மோதல் ஏற்பட்டதில் ஆதிதிராவிட மாணவர் ஒருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
கடந்த சில ஆண்டுகளாகவே தென் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் ஜாதி ரீதியில் மாணவர்கள் மோதல் போக்கு அதிகரித்து வருகிறது என்பதும் இதனை கட்டுப்படுத்த மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் நெல்லை மாவட்டம் வள்ளியூர் தனியார் பள்ளியில் மாணவர்கள் இடையே மோதலில் 12ஆம் வகுப்பு படிக்கும் ஆதி திராவிட மாணவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அந்த மாணவன் படுகாயம் அடைந்ததை அடுத்து ராதாபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 
 
இதனை அடுத்து பாதிக்கப்பட்ட மாணவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆறு மாணவர்கள் சீர்திருத்த பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் காவல் ஆய்வாளர் ஒருவரை மகன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவில்லை என்றும் தகவல்களை உள்ளன 
 
Edited by Mahendran