திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (15:25 IST)

சாதிப்பெயரை சொல்லி திட்டிய பேராசிரியர் – ஆசிட் குடித்து மாணவி தற்கொலை முயற்சி !

கும்பகோணம் அரசு கல்லூரியில் பேராசியர் மாணவியை சாதிப்பெயர் சொல்லி திட்டியதால் ஆசிட் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தஞ்சை மாவட்டம் ஆலமன் குறிச்சியைச் சேர்ந்த அன்பழகனின் மகள் கவுசல்யா. இவர் கும்பகோணம் அரசினர் கல்லூரியில் எம்.எஸ்சி படிப்பை முடித்து விட்டு தற்போது எம்.பில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இவர் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரையை பேராசிரியர் ராமச்சந்திரன் என்பவர் நீண்டகாலமாக அலைக்கழித்துள்ளார்.

இது சம்மந்தமாக அவரிடம் விளக்கம் கேட்க அவர் கவுசல்யாவை சாதிப் பெயர் சொல்லி திட்டியுள்ளார். இதனால் விரக்தியடைந்த கவுசல்யா ஆய்வகத்தில் இருந்த ஆசிட்டை எடுத்துக் குடித்து மயக்கமடைந்துள்ளார். உடனடியாக அவர் கும்பகோணம் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுசம்மந்தமாக கவுசல்யாவின் தாயார் கும்பகோணம் கிழக்கு போலீசில் புகார் செய்தார்.  அந்தப் புகாரை ஏற்ற போலிஸார் பேராசிரியரை விசாரணை செய்து வருகின்றனர்.