ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 15 பிப்ரவரி 2020 (10:30 IST)

சரியான நேரத்துக்கு வராத ஆம்புலன்ஸ்… மாணவனின் உயிர்போன பரிதாபம் !

மாணவன் கணேஷ்

காஞ்சிபுரம் அருகே மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட மாணவன் ஆம்புலன்ஸ் அழைத்து சொல்லியும் உரிய நேரத்திற்கு வராததால் அந்த மாணவன் உயிரிழந்துள்ளார்.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மாணவர் கணேஷ் குமார். இவருக்கு மூச்சுத்திணறல் அடிக்கடி வரும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த 9 ஆம் தேதி பச்சையப்பன் பள்ளி மைதானத்தில் கனேஷ் தனியாக இருந்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாலும் சுற்றி ஆட்கள் யாரும் இல்லாததாலும் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு அழைத்துள்ளார். மூச்சுத்திணறலால் அவர் அவதிப்பட்டதால் அவரால் சரியாக பேசி தான் இருக்கும் இருப்பிடத்தை சொல்ல முடியவில்லை. எதிர்முனையில் இருந்தவரால் இவர் பேசியதை புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால் அவருக்கு உதவி செய்ய உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் வரவில்லை.

உரிய நேரத்தில் உதவி கிடைக்காததால் அதிர்ச்சியளிக்கும் விதமாக அந்த மாணவன் உயிரிழந்துள்ளார். அவர் இறந்து சில நாட்களுக்குப் பின்னரே அவரது செல்போனில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு போன் செய்து உதவி கேட்டதைக் கண்டுபிடித்துள்ளனர்.