1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (18:59 IST)

2ஆம் வகுப்பு மாணவர் வலிப்பு வந்து உயிரிழப்பு.. வகுப்பறையில் நிகழ்ந்த சோகம்..!

திருச்சியில் தனியார் பள்ளியில் படித்து வந்த இரண்டாம் வகுப்பு மாணவன் வகுப்பறையில் வலிப்பு வந்து சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் உணவு இடைவேளையின் போது மாணவர்கள் சாப்பிட்டுவிட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது இரண்டாம் வகுப்பு மாணவருக்கு திடீரென உடல் அளவு குறைவு ஏற்பட்டதை அடுத்து அந்த மாணவர் வகுப்பறையில் தனியாக உட்கார்ந்து இருந்தார். இதை அடுத்து அந்த மாணவருக்கு திடீரென வலிப்பு வந்ததாக தெரிகிறது. 
 
மற்ற மாணவர்கள் அனைவரும் விளையாடிக் கொண்டிருந்ததால் வலிப்பு வந்த மாணவரை கவனிக்கவில்லை என்றும் அதன் பின்னர் சில நிமிடங்கள் கழித்து வந்த போது தான் மாணவர் வலிப்பு வந்து மயங்கி விழுந்தது தெரிய வந்ததாகவும் கூறப்படுகிறது. 
 
இதை அடுத்து உடனடியாக மாணவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற போது மருத்துவர்கள் அந்த மாணவரை பரிசோதித்து ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இது குறித்து தகவல் அறிந்து வந்த மாணவரின் பெற்றோர் வலிப்பு வந்த உடனே தங்கள் மகனை து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என்று கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva