புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (10:13 IST)

நாள் முழுவதும் வீடியோகேம்… பெற்றோர் கண்டித்ததால் மாணவி எடுத்த் அதிர்ச்சி முடிவு!

சென்னையில் வீடியோகேம் விளையாடுவது குறித்து பெற்றோர் எச்சரித்ததால் மாணவி தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர், வரதராஜபுரம் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரின் மகள் பத்மாவதி. இவர் அண்ணாநகரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு பி காம் படித்து வந்துள்ளார். இவர் செல்போனில் எப்போதும் வீடியோ கேம் போன்றவற்றை விளையாடுவதில் மிகுந்த ஆர்வமாக இருந்துள்ளார்.

இதனால் மாணவியின் பெற்றொர் அவரைக் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் தூக்குமாட்டி கொண்டுள்ளார். இதைப் பார்த்த பெற்றோர் அதிர்ச்சியாகி அவரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .ஆனால் அதற்குள்ளாகவே பத்மாவதியின் உயிர் பலியாகி விட்டது. இந்த தற்கொலை குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.