திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 21 செப்டம்பர் 2020 (17:04 IST)

சூர்யா உருவ படத்தை எரித்து இந்து முன்னணியினர் போராட்டம் !

சமீபத்தில் நீட் தேர்வு அச்சம் காரணமாக ஒரே நாளில் 3 மாணவர்கள்  தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து இது பெரும் பொருளானது என்றாலும் நீட் தேர்வு மத்திய அரச்யு வழிகாட்டலில் சிறப்பாக நடந்து முடிந்தது.

இந்த நீட் தேர்வுக்கு எதிராக  நடிகர் சூர்யா அறிக்கை  வெளியிட்டார். இதுதொடர்பாக  பாஜக மற்றும் அதன் ஆதரவு கட்சியினர் கடும் விமர்சனம் தெரிவித்தனர்.

அவரை அடித்தால் ரூ.1 லட்சம் பரிசு தரப்படும் என அறிவிப்பை வெளியிட்டனர். இந்நிலையில், நடிகர் ராதாரவி சூர்யா மீது விமர்சனம் தெரிவித்துள்ளர். அவர் கூறியுள்ளதாவது 

நீட் தேர்வுகள் மட்டுமின்றி பல விவகாரங்களில் சூர்யா  சாரம்சம் தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்.  இதுபோன்று விபரங்கள் தெரியாமல் பேசுபவர்களுக்கு 6 மாத காலம் சிறைத்தண்டனை  வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து,  நீட் தேர்வு மற்றும் புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக பேசூ வரும் சூர்யாவைக் கண்டித்து, இந்து முன்னணியினர் ஆர்ப்பட்டாடம் நடத்தினர். அத்துடன் அவரது புகைப்படத்தை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.