1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Anandakumar
Last Updated : வெள்ளி, 4 மார்ச் 2022 (23:16 IST)

சுயேட்சையாக போட்டியிட்டு தோற்றும் மக்களுக்காக அடித்த போஸ்டர்களால் பரபரப்பு.

ஒரு கோடி பரிசு, நேர்மையான முறையில் தேர்ந்தெடுக்கப்ப்ட்ட வார்டு கவுன்சிலர்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம் – சுயேட்சையாக போட்டியிட்டு தோற்றும் மக்களுக்காக அடித்த போஸ்டர்களால் பரபரப்பு.
 
 
கரூர் மாநகரத்தின் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் ரூ 1 கோடி பரிசு மற்றும் பாராட்டு விழா என்ற தலைப்பில் ஒட்டப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே நகரமைப்பு தேர்தலில் 26 வது வார்டு கவுன்சிலராக போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளரும், சமூக நல ஆர்வலருமான ராஜேஸ்கண்ணன் சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரில் கரூர் மாநகராட்சியில் ஒட்டுக்கு பணம் கொடுக்காமல் நேர்மையான முறையில் தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு கவுன்சிலர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு விழா என்றும், நாள், 07-03-2022 என்றும், இடம் காமராஜபுரம் என்றும் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 05-03-2022 என்றும் அந்த போஸ்டரில் வாசகங்கள் பொருந்தியுள்ளது. பல்வேறு இடங்களில் இந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்டு அதன் மீது வேறு போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது