இது என்னங்கடா பகல் கொள்ளையா இருக்கு...
100 ஆண்டுகள் பழமையான நீராவி என்ஜின் டிக்கெட் விலை நடுத்தர மக்களுக்கு ஏற்றதாக இல்லை என அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும், பழமையை கொண்டாடும் வகையிலும், 100 ஆண்டுகள் பழமையான நீராவி என்ஜின் இன்று முதல் இயக்கப்படுகிறது.
சென்னை எழும்பூர் - கோடம்பாக்கம் இடையே 4 முறை இயக்கப்படும் இந்த நீராவி என்ஜினில் பயணம் செய்ய பெரியவர்களுக்கு 500 ரூபாயும் சிறியவர்களுக்கு 300 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இரண்டு வழிக்கட்டணமாக ரூ.1500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நீராவி என்ஜின் மணிக்கு 30 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது ஆகும்.
இதற்கான முன்பதிவு மையம் எழும்பூர் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பழமை வாய்ந்த நீராவி என்ஜின் ரயில் இயக்கம் சென்னை மக்களை இன்ப அதிர்ச்சியில் தள்ளியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இதன் டிக்கெட் விலை தான் ஓவராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.500, ரூ.300 என்பது மிகவும் அதிகமானதாக இருக்கிறது என்றும், நடுத்தர மக்களுக்கு இது சிம்ம சொப்பனமாக உள்ளது என்று தெரிவித்து வருகின்றனர்.