திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 26 ஜூலை 2021 (21:54 IST)

இளங்குமரனார் அவர்களின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு: முதல்வர் ஸ்டாலின் டுவிட்

பழம்பெரும் தமிழ் அறிஞரும் இளங்குமரனார் இன்று காலமானதை அடுத்து அவரது மறைவிற்கு தமிழ் ஆர்வலர்கள் அரசியல் பிரபலங்கள் திரை உலக பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர்
 
குறிப்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்பட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் அறிக்கை வெளியிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் இளங்குமரனார் அவர்கள் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்று தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: தமிழே உயிர்மூச்சென வாழ்ந்த அய்யா இளங்குமரனார் அவர்களின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு!
 
500-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியவர்; சமஸ்கிருத மந்திரங்கள் தவிர்த்து திருக்குறள் ஓதி - தமிழில் வாழ்த்தி திருமணங்களை நடத்தியவர். அரசு மரியாதையுடன் அய்யாவின் இறுதி நிகழ்வு நடைபெற்றது.