செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : சனி, 8 மே 2021 (09:57 IST)

மே 2க்கு பிறகு ஊரடங்கு இருக்காது என்று சொன்னாரே ஸ்டாலின்:? நெட்டிசன்கள் கேள்வி

தமிழகத்தில் சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றபோது தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் மே 2ஆம் தேதிக்கு பிறகு இன்னொரு ஊரடங்கு இருக்காது என்றும் தமிழக மக்கள் இன்னொரு ஊரடங்கை தாங்கும் நிலையில் இல்லை என்றும் கூறியிருந்தார் 
 
இதுகுறித்து அவரது அவர் வெளியிட்ட அறிக்கையில் ’மே 2 ஆம் தேதிக்கு பிறகு இன்னொரு ஊரடங்கை தாங்கும் நிலையில் தமிழக மக்களும் அவர்களின் வாழ்வாதாரமும் இல்லை என்றும் தெரிவித்திருந்தார் 
 
மேலும் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னேற்பாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமென்றும் ஊரடங்கு இல்லாமல் கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து அரசு சிந்திக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார் 
 
இந்த நிலையில் தற்போது தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றிருக்கும் நிலையில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அப்படியென்றால் அவருடைய முந்தைய வாக்குறுதி என்ன ஆச்சு என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்