1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 7 ஏப்ரல் 2018 (15:47 IST)

எந்த வழக்கையும் சந்திப்போம், எந்த தண்டனையையும் ஏற்போம்: ஸ்டாலின் ஆவேசம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் பொதுமக்களிம், திமுக மற்றும் பிற கட்சிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். 
இந்நிலையில், இது குறித்து இன்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பின்வருமாறு பேசியுள்ளார். அவர் கூறியதாவது, திருச்சி மாவட்டம், முக்கொம்பில் இன்று தொடங்கி, வரும் 13 ஆம் தேதி கடலூர் வரையில் காவிரி உரிமை மீட்புப பயணம் நடைபெறவுள்ளது. 
 
வரும் 9 ஆம் தேதியன்று இன்னொரு குழுவாக அரியலூர் மாவட்டத்தில் இருந்து பயணம் தொடங்குகிறது. நிறைவாக, கடலூரில் மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடைபெறும். அதில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, கடலூரில் இருந்து பேரணியாக புறப்பட்டு, சென்னையில் ஆளுநரிடம் அந்தத் தீர்மானங்களை வழங்கவிருக்கிறோம்.
தமிழக அரசை, ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசிடம் சரணாகதி அடைந்திருக்கின்ற நிலையில் இருக்கிறது. பிரதமர் யாரையும் சந்திக்க தயாராக இல்லை. எனவே, அவரை கறுப்பு கொடியுடன் சந்திக்க திட்டமிட்டு இருக்கிறோம்.
 
காவிரி விவகாரத்தில் எங்கள் மீது என்ன வழக்கு தொடர்ந்தாலும், மகிழ்ச்சியாக அதனை ஏற்று, என்ன தண்டனை கொடுத்தாலும் பெருமையாக ஏற்க தயாராக இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.