திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

மைலாப்பூரில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் இந்த நடிகையா?

தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திப்பதற்காக வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக நேர்காணல்களை நடத்தி வருகின்றன என்பது தெரிந்ததே
 
திமுக அதிமுக ஆகிய கட்சிகள் ஏற்கனவே நேர்காணலை கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியும் நேர்காணலை நடத்தி வருகிறது. அந்த வகையில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்து இருந்த நடிகை ஸ்ரீபிரியா இன்று நேர்காணலில் கலந்து கொண்டார் 
 
மயிலாப்பூர் தொகுதி தனக்கு விருப்பமான தொகுதி என்றும் அங்குள்ள மக்கள் தனக்கு நெருக்கமானவர்கள் என்றும் இந்த தொகுதியில் தனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும் அவர் நேர்காணலில் தெரிவித்துள்ளார்
 
மேலும் தேர்தல் ஆணையம் ஒரு தொகுதியில் எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்று வரைமுறை வகுத்துள்ளதோ, அந்த தொகையை மட்டும்தான் செலவு செய்வதாகும் ஸ்ரீபிரியா தெரிவித்துள்ளார் 
 
இது குறித்த வீடியோ மக்கள் நீதி மய்யம் டுவிட்டர் பக்கத்தில் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது