செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 11 அக்டோபர் 2024 (13:45 IST)

இலங்கை கடற் கொள்ளையர்கள் தமிழக மீனவர்களை கத்தி முனையில் மிரட்டி 770கிலோ வலை அபகரிப்பு!

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த செருதூர் மீனவ கிராமத்திலிருந்து, 8ம் தேதி ஏராளமான மீனவர்கள் பைபர் படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
அதன்படி  ராஜ்குமார்  என்பவருக்கு சொந்தமான  பைபர் படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ராஜ்குமார் உள்ளிட்ட 5 நபர்கள் நேற்றிரவு  கோடியக்கரையில் இருந்து தென்கிழக்கே 20 நாட்டிகள் கடல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். 
 
அப்போது அங்கு 2 பைபர் படகுகளில் வந்த இலங்கையைச் சேர்ந்த தமிழ் பேசக்கூடிய 9 நபர்கள், தங்களிடம் கத்தியை காட்டி மிரட்டி 200 கிலோ வலையை பறித்துச் சென்று விட்டதாக, இன்று கரை திரும்பிய மீனவர்கள் புகார் அளித்துள்ளனர்.
 
இதேபோல செல்லையன் செருதூர் என்பவருக்கு சொந்தமான பதிவெண் இல்லாத பைபர் படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற செல்லையன் உள்ளிட்ட 5 நபர்களை 3 பைபர் படகுகளில் வந்த இலங்கையைச் சேர்ந்த தமிழ் பேசக்கூடிய 9 நபர்கள், தங்களிடம் கத்தியை காட்டி மிரட்டி 200 கிலோ  வலை, ஜிபிஎஸ்-1, மீன் சுமார் 100 கிலோ, செல்போன் 3, ஆகியவற்றை பறித்துச் சென்றதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதேபோல  மகேஸ்வரி  செருதூர் என்பவருக்கு சொந்தமான   பைபர் படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற செல்வம், தங்கவேல் உள்ளிட்ட 4 நபர்களை பைபர் படகுகில் வந்த இலங்கையைச் சேர்ந்த தமிழ் பேசக்கூடிய 3 நபர்கள்  கத்தியை காட்டி  ஜிபிஎஸ்-1, மீன் சுமார் 120 கிலோ, வெள்ளி அரைஞான் கயிறு 1 ஆகியவற்றை பறித்துச் சென்று விட்டதாக, கரை திரும்பிய மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.இதே போல ‌ சத்தியசீலன் செருதூர் என்பவருக்கு சொந்தமான  பைபர் படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற  4 மீனவர்களை  2 பைபர் படகுகளில் வந்த இலங்கையைச் சேர்ந்த தமிழ் பேசக்கூடிய ஆறு நபர்கள், தங்களிடம் கத்தியை காட்டி மிரட்டி 250 கிலோ மதிப்புள்ள மீன்பிடி வலை, செல்போன் 1. ஜிபிஎஸ் 1, டீசல் சுமார் 100 லிட்டர் மற்றும் ரேஷன் பொருட்களை பறித்து சென்று விட்டத மொத்தம் நான்கு சம்பவங்கள் இலங்கை கடல் கொள்ளையர்களால் நடத்தப்பட்டுள்ளது.
 
மேற்படி இன்று காலை  கரை திரும்பிய இலங்கை கடல் கொள்ளையர்கள் கத்தி முனையில் தங்களை மிரட்டி தாக்கம் முற்பட்டு  மீன்பிடி வலை உள்ளிட்ட மீன் பிடி உபகரண பொருட்களை பறித்து சென்றதாக வேதனை தெரிவித்துள்ளனர். 
 
மொத்தமாக நான்கு பைபர் படகில் இருந்த 770 கிலோ வலை, சுமார் 100 லிட்டர் டீசல், மீன்கள் gps கருவி , செல்போன் உள்ளிட்ட பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிகொடுத்து விட்டதாக  தெரிவித்தனர்.
 
இதுகுறித்து கீழையூர் கடலோர காவல் குழுமம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இந்த சம்பவம் நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.