புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 19 மார்ச் 2021 (07:38 IST)

பெண் ஐபிஎஸ் அதிகாரி பாலியல் விவகாரம்: சிறப்பு டிஜிபி சஸ்பெண்ட்!

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவரை காரில் வைத்து சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
இது குறித்து சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை சஸ்பெண்ட் செய்ய வேண்டுமென சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசை வலியுறுத்தியது 
 
இதனை அடுத்து தற்போது அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக நடத்தி வருவதாகவும் விரைவில் இந்த வழக்கை முடிக்க விசாரணையை துரிதமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
இந்த நிலையில்தான் சென்னை ஐகோர்ட்டின் வலியுறுத்தலை அடுத்து சிறப்பு டிஜிபி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை சஸ்பெண்ட் செய்ய வேண்டுமென திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது