சமூக வலைதளங்களுக்கு தணிக்கை! – பதிலளிக்க பேஸ்புக், யூட்யூபுக்கு உத்தரவு!

Madurai court
Prasanth Karthick| Last Modified புதன், 27 ஜனவரி 2021 (16:41 IST)
சமூக வலைதளங்களில் தணிக்கைக்குரிய பதிவுகளை அந்தந்த நிறுவனங்களே நீக்குவது குறித்து பதிலளிக்க பேஸ்புக், யூட்யூப் மற்றும் கூகிளுக்கு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நாள்தோறும் பேஸ்புக், யூட்யூப் மற்றும் கூகிளில் பல்வேறு தகவல்கள் பரிமாறப்படும் சூழலில் அதில் பல சர்ச்சையை ஏற்படுத்துபவையாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. சர்ச்சைக்குரிய பதிவுகளை சமூக வலைதளங்களில் உள்ள மற்ற பயனாளர்கள் சுட்டிக்காட்டி நீக்க வலியுறுத்தும் வசதி இருந்தாலும், அவ்வாறான பதிவுகள் பதிவான உடனேயே நீக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை கிளை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் பேஸ்புக், யூட்யூப் மற்றும் கூகிள் உள்ளிட்ட நிறுவனங்கள் பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :