1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 22 ஜனவரி 2023 (17:16 IST)

கடற்கரையில் மூட்டை மூட்டையாக காலணிகள் கண்டெடுப்பு! – ராமேஸ்வரத்தில் பரபரப்பு!

Slippers
ராமேஸ்வரம் கடற்கரையில் கடத்துவதற்காக மூட்டை மூட்டையாக செருப்புகள் பதுக்கப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டிணம், ராமேஸ்வரம் பகுதி வழியாக இலங்கைக்கு கடல் அட்டைகள், மஞ்சள் உள்ளிட்ட பல பொருட்கள் கடத்தப்படுவதும், அதை கடலோர காவல் படையினர் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் ராமேஸ்வரம் சேராங்கோட்டை அருகே கடற்கரை மணலில் சில மூட்டைகள் புதைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. காவல்துறையினர், சுங்கத்துறை அதிகாரிகள் சென்று அந்த மூட்டைகளை பறிமுதல் செய்ததில் அதில் காலணிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. 15க்கும் மேற்பட்ட சாக்குப்பைகளில் 250 ஜோடி காலணிகள் இருந்துள்ளது.

இந்த காலணிகளை இலங்கைக்கு கடத்துவதற்காக சிலர் பதுக்கி வைத்திருந்திருப்பது தெரிய வந்துள்ள நிலையில் அவற்றின் மதிப்பு ரூ.6 லட்சம் இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Edit By Prasanth.K