செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 22 டிசம்பர் 2018 (21:52 IST)

ஸ்லீப்பர்செல் வெளியே வருவது எப்போது? தங்கதமிழ்செல்வன் தகவல்

அதிமுகவில் உள்ள ஸ்லீப்பர்செல்கள் எப்போது வெளியே வருவார்கள் என்பது குறித்த தகவலை தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றின் பேட்டியின்போது தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் தங்களுடைய ஸ்லீப்பர்செல் இருப்பது உறுதி என்றும், ஆனால் தாங்கள் தற்போது எம்.எல்.ஏ பதவி இழந்துள்ளதால் அதிமுகவில் உள்ள ஸ்லீப்பர்செல் வெளியே வர வாய்ப்பு இல்லை என்றும், 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்து முடிந்த பின்னர் அவர்கள் வெளியே வருவார்கள் என்றும் தங்கதமிழ்செல்வன் கூறினார்

தங்கதமிழ்செல்வன் கூறுவது போல் அதிமுகவில் ஸ்லீப்பர்செல் இருந்தால் இடைத்தேர்தலுக்கு பின் அதிமுக ஆட்சி கவிழ்வது உறுதி என்றும், ஆனால் அதுவரை அதிமுகவுக்கு செல்லாமல் தங்கதமிழ்செல்வன் இருக்க வேண்டும் என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.