1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 11 டிசம்பர் 2020 (08:06 IST)

10 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் பாதிப்பு: கொரோனாவில் இருந்து மீண்டு விட்டதா தமிழகம்?

10 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் பாதிப்பு
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த 7 மாதங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தமிழகம் கிட்டத்தட்ட மீண்டு விட்டதாகவே கருதப்படுகிறது 
 
நேற்று தமிழகத்தில் மொத்தம் 1220 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவிய போதிலும் 30 மாவட்டங்களில் கொரோனாவால் உயிரிழப்பு இல்லை என்பது ஒரு ஆறுதலான செய்தி. சென்னையில் ஒரே ஒருவர் மட்டுமே கொரோனாவால் பலியானார் என்பதும் அவருக்கு வயது 99 என்பதும் குறிப்பிடத்தக்கது
 
நேற்று தமிழகத்தில் மொத்தம் 17 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும் சென்னையில் 311 பேர் அதிகபட்சமாக நேற்று பாதிக்கப்பட்டாலும் 10 மாவட்டங்களில் நேற்றைய காரணம் பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
தமிழகம் முழுவதும் மொத்தம் 10 ஆயிரத்து 392 பேர்கள் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழக மக்கள் தொகையான 6 கோடியில்  10,000 பேர்களுக்கு மட்டுமே கொரோனா வைரஸ் இருக்கிறது என்பது கிட்டத்தட்ட தமிழகம் கொரோனாவில் இருந்து மீண்டு விட்டதாகவே கருதப்படுகிறது 
 
இருப்பினும் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது மாஸ்க் அணிதல், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல் ஆகியவற்றை தொடர்ந்து கடைபிடித்தால் தமிழகம் முழுமையாக கொரோனாவில் இருந்து இன்னும் ஒரு சில வாரங்களில் மீண்டு விடும் என்று சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்