சென்னையில் போட்டியிட்ட பாடகர் கானா தோல்வி: ஆனாலும் இரண்டாமிடம் பிடித்தார்!
தமிழ் திரையுலகின் பாடகர்களில் ஒருவரான கானா பாலா சென்னை திருவிநகர் 65வது மண்டலத்தில் 72 வது வார்டில் போட்டியிட்டார். இவர் அந்த பகுதியில் 6095 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்
முதலிடத்தை பெற்ற திமுக வேட்பாளர் சரவணன் 8301 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2006, 2011 ஆகிய இரண்டு தேர்தலில் போட்டியிட்ட கானா பாலா இந்த தேர்தலில் வெற்றி அடைவர் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் சுமார் இரண்டாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கானா பாலா தோல்வி அடைந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.