வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 6 மே 2021 (16:29 IST)

தமிழகத்தில் நாளை வரை மட்டுமே ஆக்ஸிஜன் உள்ளது… அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தில் நாளை வரை  மட்டுமே ஆக்ஸிஜன் கையிருப்பு உள்ளதாக மருத்துவ பணிகள் கழகம் தெரிவித்துள்ளது.

கொரோனா இரண்டாம் அலையால் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மோசமான சூழல் உருவாகி உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஆக்ஸிஜன் கையிருப்பு எவ்வளவு உள்ளது என நீதிமன்றமே தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் நாளை வரை மட்டுமே ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் கையிருப்பு உள்ளதாகவும், நாளை மறுநாள் மோசமான நிலையை எட்டிவிடுவோம் எனக் கூறியுள்ளது.