செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 11 செப்டம்பர் 2023 (12:55 IST)

வெற்றிமாறனுக்கு நன்றி கூறிய சவுக்கு சங்கர்

savukku shankar-vetrimaran
பிரபல யூடியூபராகவும், சவுக்கு மீடியாவை நிர்வகிப்பவரும் பத்திரிக்கையாளராகவும் இருந்து வருபவர் சவுக்கு சங்கர். இவரது அரசியல் கருத்துகளுக்காக அடிக்கடி ட்ரெண்டிங்கிலும் இருந்து வருகிறார்.

இவர்,  பாஜக, திமுக, உள்ளிட்ட கட்சிகளுக்கு எதிராக அதிரடியான கருத்துக்களை கூறி வரும்  நிலையில், சமீபத்தில் சவுக்கு சங்கரை அதிமுகவின் தேர்தல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதையடுத்து, சவுக்கு சங்கர் சவுக்கு என்ற விசுவல் மீடியாவை தொடங்கவுள்ளதாக சமீபத்தில் பேட்டியளித்திருந்த நிலையில்,  நேற்று 'சவுக்கு மீடியா பிரைவேட் லிமிட்டேட்' நிறுவன தொடக்கவிழா நடைபெற்றது.

இந்த விழாவில், இயக்குனர் வெற்றிமாறன், நடிகை நமீதா உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.

இந்த விழாவில் கலந்து கொண்ட வெற்றிமாறன் மேடையில் பேசினார். இந்த நிலையில், இன்று சவுக்கு சங்கர், வெற்றிமாறனுக்கு நன்றி தெரிவித்து தன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.