திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Bala
Last Updated : வியாழன், 12 மே 2016 (11:30 IST)

கவுசல்யா தற்கொலை முயற்சி

உடுமலையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட காதல் தம்பதியினரான சங்கர்-கவுசல்யா ஆகியோர் மீது உடுமலையில், மார்ச் 13 ஆம் தேதி ஜாதி வெறிக் கும்பல் சரமாரியாக வெட்டியது. இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த சங்கர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதில் படுகாயம் அடைந்த  கவுசல்யா  சிகிச்சை பெற்று கணவரின் பெற்றோருடன் வீடு திரும்பினார்.  இந்த கொலை வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் உடுமலைப்பேட்டையில் கவுசல்யா இன்று விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக மீட்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கவுசல்யாவின் தற்கொலை முயற்சிக்கு என்ன காரண்அம்? யாரேனும் அவருக்கு நெருக்கடி கொடுத்தனரா என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸாரிடம் கவுசல்யா கூறுகையில், சங்கர் நான் சென்ற இடத்திற்கு நீயும் வந்துவிடு என்று அழைத்தார். இதனால் நான் தற்கொலைக்கு முயன்றேன் என்று கூறியாதாக தெரிகிறது.