புதன், 18 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: புதன், 7 ஜூலை 2021 (16:31 IST)

பெண்கள் திருநங்கைகளுக்கு தனிடிக்கெட் !

தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள திமுக குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்குவதாக தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்தது.

அதேபோல், குடும்ப அட்டைக்கு ரூ.4000 என கொரொனா நிவாரண நிதியாக அறிவித்து 2 தவணைகளாக மக்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக முழுவதிலும் அரசு டவுன் பேருந்துகளில் பெண்கள், திருநங்கைகள்,  மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளுடன் வரும்  உதவியாளர்கள் இலவசமாகப்  பயணிக்கத் தனி டிக்கெட் வழங்கப்படுகிறது. இதனால் பயனானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.