ஞாயிறு, 10 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (11:58 IST)

அமலாக்கத்துறைக்கு இதற்குமேல் அவகாசம் தர முடியாது: செந்தில் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றம்..!

senthil balaji
செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கில் அமலாக்கத்துறைக்கு இதற்கு மேல் அவகாசம் அளிக்க முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னால் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது ஜாமின் மனு அடுத்தடுத்து நீதிமன்றங்களில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் இது குறித்த வழக்கு நடந்து வருகிறது.

இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கில் அமலாக்கத்துறைக்கு இதற்கு மேல் கூடுதல் அவகாசம் தர முடியாது என்றும் இன்று தான் இறுதி நாள் என்றும் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் கோரிக்கையை ஏற்று இன்று கடைசி வழக்காக செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு விசாரிக்கப்படும் என்று நீதிபதி கூறியுள்ளார். இதனால் இன்று செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கில் ஒரு முடிவு தெரிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Edited by Mahendran