திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 7 ஜனவரி 2018 (11:43 IST)

மனம் இருக்கு ஆனா பணம் இல்லையே... போக்குவரத்து ஊழியர்களுக்கு செங்கோட்டையன் பதில்!!

ஊதிய உயா்வு, பிடித்து வைக்கப்பட்டுள்ள தொழிலாளா்களின் 7 ஆயிரம் கோடி ரூபாய் பணம் ஆகியவற்றை, விரைந்து வழங்க வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்து தொமுச, சிஐடியு உள்ளிட்ட தெழிற்சங்க பணியாளா்கள் இன்று 4 வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
இந்நிலையில், இதுகுறித்து அமைச்ச்சர் செங்கோட்டையன் பின்வருமாறு பேட்டி அளித்துள்ளார். போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற எங்களுக்கும் ஆசைதான். ஆனால் இப்போது எங்களிடம் போதிய நிதி இல்லை. ஊழியர்கள் கேட்கும் ஊதியத்தை தர எங்களிடம் மனம் உள்ளது. ஆனால் அதற்கான பணம் எங்களிடம் இல்லை என தெரிவித்துள்ளார். 
 
போக்குவரத்து ஊழியா்களின் போராட்டத்தால் தமிழகம் முழுவதிலும் பேருந்து சேவை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தனியார் பேருந்து ஓட்டுநா்கள், லாரி ஓட்டுநா்கள், கல்லூாரி பேருந்து ஓட்டுநா்களை கொண்டு ஒருசில பகுதிகளில் போக்குவரத்து சேவை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.