ஞாயிறு, 10 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 2 செப்டம்பர் 2024 (17:58 IST)

ஆளுநர் ஆர்.என்.ரவி வருத்தம் தெரிவிக்க வேண்டும்: செல்வபெருந்தகை

Selvaperundagai
தமிழ்நாட்டு கல்விக் கொள்கை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த ஆளுநர் ஆர் என் ரவி வருத்தம் தெரிவிக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்  செல்வபெருந்தகை  கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த காலங்களில் புதிய கல்விக் கொள்கையை பற்றி அனைத்து மேடைகளிலும் பேசினார். ஆனால், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்காது என தெரிந்தவுடன், மாநில கல்விக் கொள்கையை விமர்சிக்கத் தொடங்கியுள்ளார்;

இத்தனை ஆண்டு காலம் தமிழ்நாட்டில் ஆளுநராக இருந்தவர், மாநில கல்விக் கொள்கை பற்றி கருத்து கூறாமல் தற்போது விமர்சிப்பது மிகவும் கண்டனத்துக்குரியது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையைப் பற்றி பேசுவதை விட்டுவிட்டு தமிழ்நாட்டின் கல்விக் கொள்கையைப் பற்றி தன்னுடைய கருத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வருத்தம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. X தளத்தில் பதிவு செய்துள்ளார்.

முன்னதாக தேசிய பாடத்திட்டத்துடன் ஒப்பிடும்போது மாநில பாடத்திட்டம் மோசமாக உள்ளது என்றும் பல்வேறு கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களிடம் பேசினேன், அவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ் குறித்த அறிவுத்திறன் குறைவாக உள்ளது என்றும் பள்ளி மாணவர்களுக்கு நவீன கல்வியை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் ஆளுனர் ஆர்.என்.ரவி கூறியிருந்தார்.

Edited by Siva