செயற்கைக்கோள் அனுப்பி என்ன பிரயோஜனம், இதுக்கு ஒரு கருவி கண்டுபிடிங்கய்யா: சிமான்
ஆயிரம் கோடி, இரண்டாயிரம் கோடி செலவு செய்து விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை அனுப்பி ஆய்வு செய்வதில் என்ன பிரயோசனம்? குழந்தைகள் ஆழ்துளை கிணற்றில் விழுந்தால் அவர்களை மீட்பதற்கு ஒரு நல்ல கருவியை கண்டுபிடிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்
மணப்பாறை அருகே 2 வயது குழந்தை சுர்ஜித் நேற்று மாலை வீட்டில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென ஆழ்துளை கிணற்றில் விழுந்தது. 30 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் அந்த குழந்தை 10 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்டு தவித்துக் கொண்டிருக்கிறது
அந்த குழந்தையை உயிருடன் மீட்க தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் நேற்று இரவு முதல் போராடி வருகின்றனர். இந்த நிலையில் ஜேசிபி எந்திரம் மற்றும் நவீன இயந்திரங்கள் மூலமும் இதற்கு முன் மதுரையில் குழந்தையை மீட்ட மணிகண்டன் என்பவரை வரவழைத்தும் செய்த பல முயற்சிகள் செய்தும் அந்த குழந்தையை இன்னும் வெளியே எடுக்க முடியவில்லை
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் சீமான் இதுகுறித்து கூறியதாவது: விண்வெளிக்குச் செயற்கைக்கோள்களை அனுப்பி நம் நாடு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிற செய்திகேட்டு பெருமைப்படுகிற அதே காலக்கட்டத்தில் ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுந்து அதை மீட்கப் போராடி வருவது வெட்கித் தலைகுனிய வைக்கிறது
மேலும், ஆழ்துளைக்கிணற்றில் சிக்குண்டு இருக்கும் குழந்தை சுர்ஜித்தை பாதுகாப்பாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசைக் கோருகிறேன்