ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 12 ஜூன் 2020 (23:01 IST)

தமிழக அரசை பாராட்டிய சீமான்…

தமிழகத்தில் உள்ள ஊர்களுக்கு இனிமேல் தமிழில்தான் பெயர் இருக்க வேண்டும் என தமிழக அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. அரசின் உத்தரவுக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாம் தமிழர் என்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக ஊர் பெயர்கள் மற்றும் தமிழக அரசிற்குப் பாராட்டு. சமஸ்கிருத பெயர்களையும் தமிழ்படுத்த வேண்டும் என அவர் அரசிற்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் , தமிழ் நாடு என்பதற்கு வழங்கப்படும் Tamil nadu என்பதனையும் தமிழ் உச்சரிப்பான Tamizh Naddu என்று மாற்ற வேண்டும். தமிழ் நாடு எனும் பெயரை அதே மாதிரி உச்சரித்து தமிழுக்கே உரிய சிறப்பு ழகரத்தை அதே வடிவில் ஒலிக்கச் செய்ய நடவடிக்கை பேரவசியமாகிறது என தெரிவித்துள்ளார்.