1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 2 டிசம்பர் 2019 (18:27 IST)

டிவி சேனலை வறுத்தெடுக்கும் சீமான் தம்பிகள்! – ரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சி!

சீமான் குறித்த நிகழ்ச்சி ஒன்றை நடத்த இருந்த தனியார் தொலைக்காட்சியை நாம் தமிழர் கட்சியினர் விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் சமீபத்தில் மதுரையில் மாவீரர் நாளில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் சமீபத்தில் சீமான் கூறிய சில கதைகள் குறித்த நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்புவதாக தனியார் தொலைக்காட்சி நிறுவனம் விளம்பரம் செய்துள்ளார்கள்.

இதற்கு எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்த நாம் தமிழர் கட்சியினர் அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பக்கூடாது என்றும் கண்டனங்கள் தெரிவித்தனர். இந்நிலையில் அந்த நிகழ்ச்சி காரணங்கள் எதுவும் சொல்லப்படாமலே ஒளிபரப்பாமல் நிறுத்தப்பட்டது.

இருப்பினும் தங்களது கட்சியை விமர்சிப்பதற்காகவே அந்த சேனல் நிகழ்ச்சி நடத்துவதாக கூறிய நாம் தமிழர் கட்சியினர் சிலர் அந்த சேனலுக்கு எதிராக ஹேஷ்டேகுகளையும் டிவிட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.