ஞாயிறு, 10 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 16 ஜூலை 2024 (08:19 IST)

விடிய விடிய கொட்டிய மழை.. ஒரே ஒரு மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு..!

School Student
விடிய விடிய கொட்டிய கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள ஒரே ஒரு மாவட்டத்திற்கு மட்டும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு விடிய விடிய கனமழை பெய்ததால் அந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

 நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை முன்னிட்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால் விடுமுறை அளிக்கப்படுவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நீலகிரி மாவட்டத்தில் உதகமண்டலம், கூடலூர், பந்தலூர் ஆகிய இடங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருவதை அடுத்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.


Edited by 
Siva