புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: மதுரை , வியாழன், 30 மே 2024 (16:03 IST)

பயணிகளை உடமைகளை பரிசோதிக்க ஸ்கேனர்!

மதுரை,
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், பயணிகளின் உடமைகளை பரிசோதிக்க 14 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ஸ்கேன் கருவி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
 
திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் குருசாமி, புதிய ஸ்கேனர் கருவியை பொதுமக்கள் பயன்பாட்டிற்குதிறந்து வைத்தார்.
 
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் உளவுத்துறை பாதுகாப்பை அதிகரிக்ககோரி, சுற்றரிக்கை அனுப்பியிருந்த நிலையில், ஏற்கனவே கோயிலுக்கு வரும் பக்கதர்களை பரிசோதிக்க  வாக்கிங் ஸ்கேனர் உள்ளது.
 
இந்நிலையில், மேலும், பாதுகாப்பு வசதிகளை அதிகரிக்க கூடுதலாக கோயில் சார்பாக சுமார் 14 லட்ச மதிப்பீட்டில் புதிய  லக்கேஜ் ஸ்கேனர் வாங்கப்பட்டுள்ளது.
 
அதனை கோவிலில் ஆஸ்தான மண்டபத்தின் நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ளது.
 
இதனை திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் குருசாமி திறந்து வைத்தார். கோயிலின் கண்காணிப்பாளர்கள் ரஞ்சனி , சுமதி, சத்தியசீலன் ஆகியோர் உடன் இருந்தனர் .
 
புதிய பக்தர்கள் லக்கேஜ் ஸ்கேனருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.