வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By vinoth
Last Updated : சனி, 19 நவம்பர் 2022 (15:17 IST)

கடலூர் சிறையில் இருந்து விடுதலை ஆனார் சவுக்கு சங்கர்!

சவுக்கு சங்கர் கடலூர் மத்திய சிறையில் இருந்து சற்று முன்னர் விடுதலை செய்யப்பட்டார்.

நீதித்துறை குறித்து அவமதிப்பு செய்யும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக சவுக்கு சங்கர் மீது வழக்கு தொடரப்பட்டு அவருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர் தற்போது மத்திய கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சவுக்கு சங்கர் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். அதையடுத்து அவரது தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

ஆனால் அவர் மீது மேலும் நான்கு வழக்குகள் பதியப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டார். அந்த நான்கு வழக்குகளிலும் ஜாமீன் பெற்ற அவர், இன்று கடலூர் மத்திய சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.