1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 17 ஜூலை 2022 (08:49 IST)

சதுரகிரியில் ஆடி அமாவாசை விழா; பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு அனுமதி!

sathuragiri
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆடி அமாவாசை விழா நடைபெற உள்ளதால் 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் ஆடி மாதம் அமாவாசையன்று நடைபெறும் விழா மிகவும் பிரசித்தமானது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஆடி அமாவாசை விழாவிற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இந்த ஆண்டு ஆடி அமாவாசை விழா ஜூலை 28ம் தேதியன்று நடைபெற உள்ளது. இதற்காக பக்தர்கள் சதுரகிரி மலையேற ஜூலை 26ம் தேதி முதல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றுவது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.