புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 26 அக்டோபர் 2021 (08:22 IST)

ஒரு வாரகால சுற்றுப்பயணத்தை தொடங்கிய சசிகலா!

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒரு வாரகால சுற்றுப்பயணத்தை இன்று தொடங்குகிறார் சசிகலா. 

 
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா விடுதலையான பின் அரசியலில் இருந்து விலகுவதாக கூறியிருந்த நிலையில், அடிக்கடி அதிமுக தொண்டர்களோடு செல்போனில் பேசும் ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் சமீபத்தில் அதிமுக பொன்விழா கொண்டாட்டத்தின்போது அதிமுக பொதுச்செயலாளர் என சசிக்கலா பெயரில் கல்வெட்டு அமைக்கப்பட்டது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில், தென் மாவட்டங்களில் ஒரு வாரகால சுற்றுப்பயணத்தை இன்று சசிகலா தொடங்குகிறார். இன்று சென்னையில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சசிகலா, நாளை டி.டி.வி.தினகரன் மகள் திருமண வரவேற்பில் பங்கேற்கிறார். சென்னையில் இருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் 25 இடங்களில் தொண்டர்களை சசிகலா சந்திக்கிறார் என அவரது திட்ட தகவல் வெளியாகியுள்ளது.