திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (11:38 IST)

சசிகலா நியமனம் ரத்து ; இனி பொதுச்செயலாளர் பதவியே கிடையாது - தீர்மானம் நிறைவேற்றம்

தற்போது நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், சசிகலாவின் பொதுச்செயலாளர் ரத்து என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


 

 
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணி என இரண்டாக பிரிந்திருந்த அதிமுக, தற்போது எடப்பாடி அணி மற்றும் தினகரன் அணி என இரண்டாக பிரிந்துள்ளது.  
 
இரு அணிகளும் ஒன்று சேர்ந்த பின், விரைவில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று காலை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் தொடங்கியது.
 
இதில் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை நீக்கம் செய்வது உட்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
 
அதன் படி, தற்போது சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதில் முக்கியமாக, எல்லோரும் எதிர்பார்த்த சசிகலா நியமனம் செல்லாது என தீர்மானம் நிறவேற்றப்பட்டுள்ளது. அதேபோல், ஜெ.விற்கு பின் கட்சியில் இனி பொதுச்செயலாளர் பதவி கிடையாது என்கிற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.