வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 18 ஏப்ரல் 2017 (20:20 IST)

இது நேரலையா? ஆடிப் போன சசிகலா புஷ்பா

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா புஷ்பா, ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை ஆகியோரை விமர்சித்த பின் இந்த பேட்டி நேலையா என்று கேட்டு அதிர்ந்து போனாராம்.


 

 
அதிமுக இணைவது குறித்து டெல்லியில் உள்ள சசிகலா புஷ்பாவை செய்தியாளர்கள் சந்தித்து பேசினர். அந்த பேட்டியில்,
 
பன்னீர்செல்வத்தை நம்பி அவர் பின்னால் சென்ற தமிழக மக்களுக்கு உச்சக்கட்ட துரோகத்தை அவர் செய்து விட்டார். அந்த புண்ணியவதியின் சமாதியில் தியானம் செய்துவிட்டு பச்சை துரோகம் செய்துவிட்டார்.
 
முதல்வர், அமைச்சர்கள் ஊழலில் திளைத்தவர்கள். வருமான வரித்துறை நடத்திய ரெய்டுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். தினகரன் வழக்கை தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்க கூடாது, என்றார்.
 
இதையடுத்து பேட்டி முடிந்த பின் செய்தியாளர்களிடம் சசிகலா இது நேரலையா? என கேட்டுள்ளார். செய்தியாளர்கள் ஆம் என்றது அப்படியே அதிர்ந்து போய்விட்டாரம்.