சசிகலாவுக்கு மேலும் ஒரு ஆண்டு தண்டனை நீடிப்பா? பரபரப்பு தகவல்
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 கோடி ரூபாய் அபராதம் ஆகிய தண்டனை பெற்ற சசிகலா, தற்போது பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்த நிலையில் அவர் இன்னும் அபராதத் தொகையாக 10 கோடி ரூபாயை செலுத்தவில்லை என தெரிகிறது. எனவே இந்த அபராதத் தொகையை அவர் செலுத்தாவிட்டால் மேலும் ஒரு ஆண்டு சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என கூறப்படுகிறது
தற்போது 3 ஆண்டுகள் சிறைவாசத்தை முடித்து விட்ட சசிகலா 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவர் நீதிமன்றம் விதித்த 10 கோடி ரூபாய் அபராதத் தொகை செலுத்த தவறினால் கூடுதலாக ஒரு ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்துவிட்டு 2022ஆம் ஆண்டு தான் விடுதலை ஆக வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது
தண்டனை காலம் முடிவதற்குள் அவர் ரூபாய் 10 கோடி அபராதம் செலுத்துவாரா? அல்லது கூடுதலாக ஒரு ஆண்டு தண்டனையை அனுபவிப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இதுகுறித்து பெங்களூர் சிறை அதிகாரிகள் கூறியபோது ’சசிகலா 10 கோடி ரூபாய் அபராதம் செலுத்த தவறினால் தண்டனை காலம் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி வரை நீடிக்கும் என்று கூறியுள்ளனர்