புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 20 செப்டம்பர் 2023 (07:38 IST)

இனி ஆன்லைனிலும் சரவணா ஸ்டோர்ஸில் பர்சேஸ் செய்யலாம்.. சூப்பர் எஸ்.எஸ்.மார்ட் தொடக்கம்..!

சென்னை உள்பட பல நகரங்களில் இயங்கி வரும் சரவணா ஸ்டோர் தற்போது சூப்பர் எஸ்.எஸ்.மார்ட்  என்ற புதிய இணையதள நிறுவனத்தை தொடங்கி ஆன்லைனிலும் பொருள் வாங்க வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்
 
50 ஆண்டுகளுக்கு மேலாக சென்னை தி நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் சரவணா ஸ்டோர் இயங்கி வருகிறது. இந்த நிலையில் எஸ்.எஸ்.மார்ட்  என்ற இணையதளத்தை கடந்த விநாயகர் சதுர்த்தி முதல் தொடங்கப்பட்டுள்ளது.  
 
வரும் ஜனவரி மாதம் முதல் இந்த இணையதளத்தில் அனைத்து பொருட்களும் கிடைக்கும் வகையில் ஆன்லைன் ஷாப்பிங் செயல்பட தொடங்கும் என எஸ் எஸ் மார்ட் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார். 
 
சென்னையில் உள்ளவர்கள் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ளவர்களும் சரவணா ஸ்டோரில் பொருட்களை ஆன்லைன் மூலம் வாங்கிக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva