திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 30 ஜனவரி 2021 (12:16 IST)

தேர்தலே வரல.. அதுக்குள்ள தன்னை முதல்வராவே நினைச்சிக்கிட்டார்! – ஸ்டாலின் குறித்து சரத்குமார் கருத்து!

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி குறித்து பேசிய சரத்குமார், ஸ்டாலின் முதல்வராகவே நினைத்துக் கொண்டிருப்பதாக கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சார பணிகள், கூட்டணி பேச்சுவார்த்தை என பிஸியாகி உள்ளன. இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தனது கட்சி நிர்வாகிகளோடு ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார்.

திருச்சியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அவரிடம் திமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து கேட்கப்பட்டபோது “தேர்தல் வருவதற்கு முன்பே மு.க.ஸ்டாலின் தன்னை முதல்வராகவே கருதி செயல்பட்டு வருகிறார். திமுக கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி சேர வாய்ப்பே இல்லை” என கூறியுள்ளார்.