செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 12 மார்ச் 2024 (13:34 IST)

பாஜகவில் கட்சியை இணைத்தார் சரத்குமார்..! தமிழக அரசியலில் பரபரப்பு..!!

Sarathkumar
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜகவுடன் தனது கட்சியை சரத்குமார் இணைந்துள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
வருகின்ற மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடும் என சரத்குமார் அறிவித்து இருந்தார். இது தொடர்பாக பாஜகவுடன் முதல் கட்ட பேச்சு வார்த்தையும் நடத்தி இருந்தார். நேற்று அண்ணாமலையை சரத்குமார் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 
 
தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல் வெளியான நிலையில், பாரதிய ஜனதா கட்சியுடன் தனது சமத்து மக்கள் கட்சியை சரத்குமார் இன்று இணைத்தார். பாஜகவில் கட்சியை இணைத்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், மக்கள் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
 
ஒவ்வொரு முறை தேர்தல் வரும் போதெல்லாம் எத்தனை இடத்தில் போட்டி என்ற கேள்வி என்னை சங்கடமாக்கியது என்றும் நம் வலிமைக்கு மோடியுடன் சேர்ந்து செயல்பட்டால் என்ன என்ற எண்ணம் வந்ததால் கட்சியை பாஜகவுடன் இணைத்தேன் என்றும் சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார்.  காமராஜர் போல் ஒரு ஆட்சியை இந்திய முழுமைக்கும் பிரதமர் நரேந்திர மோடி வழங்கி வருகிறார் என்று சரத்குமார் பெருமிதம் தெரிவித்தார்.

 
தமிழ்நாட்டில் சரத்குமாரை அடைத்து வைக்க பாஜக விரும்பவில்லை என்றும் தேசிய அரசியலுக்கு தேவை என்றும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். பாஜகவுடன் தனது கட்சியை சரத்குமார் இணைந்துள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.