செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 19 நவம்பர் 2022 (22:23 IST)

பாரதிய ஐயப்ப தர்ம பிரச்சார சபாவின் சங்க கொடியேற்று விழா நிகழ்ச்சி

karur
கார்த்திகை முதல் தேதியையொட்டி கரூரில் அகில பாரதிய ஐயப்ப தர்ம பிரச்சார சபாவின் சங்க கொடியேற்று விழா நிகழ்ச்சி.
 
தமிழகத்தில் கரூரை மையமாக கொண்டு இயங்கும் அகில பாரதிய ஐயப்ப தர்ம பிரச்சார சபாவில் கார்த்திகை முதல் தேதி நேற்று துவங்கியதை முன்னிட்டு அமைப்பின் நிறுவனரும், முதன்மை போஷகர் பி.என்.கே மேனன் ஆசீர்வாதத்துடனும், தேசிய தலைவர் ஐயப்பதாஸ் அவர்களின் அறிவுறுத்தலின் படியும் சங்க கொடி ஏற்று விழா நிகழ்ச்சி கரூர் மாவட்ட அளவில் ஆங்காங்கே சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக காந்திகிராமத்தில் உள்ள கரூர் மாவட்ட அகில பாரதிய ஐயப்ப தர்ம பிரச்சார சபாவின் அலுவலகத்தில் சுவாமி ஐயப்பனுக்கு விஷேச பூஜைகள் செய்யப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது.

இதே போல, கரூர் மாவட்டத்தில்  தெற்கு காந்திகிராமம்,  அசோக் நகர்,  அருகம்பாளையம், வெண்ணைமலை மற்றும் தம்மநாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் மாநிலத் தலைவர்  ஆர்.வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தேசியப் பொருளாளர் எல்.ஆர்.ராஜூ,  மாநிலத் துணைத் தலைவர்  பி.சங்கரநாராயணன், மாவட்டத் தலைவர் எஸ்.ரமேஷ்,  மாவட்ட  செயலாளர்  பி.ஆர்.வாசுதேவன்,  மாவட்ட  பொருளாளர்  எம்.மகேந்திரன், மாவட்ட மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள்,  கிளை நிர்வாகிகள் என்று  அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.

வருகின்ற மண்டல மகர காலங்களில் அமைப்பின் சார்பில் நடைபெறுகின்ற அன்னதானமானது கேரளாவில் நடைபாதையில் உள்ள எரிமேலி, தமிழகத்தில் தென்காசியில் உள்ள செங்கோட்டை மற்றும் பழனி ஆகிய மூன்று இடங்களில் நடைபெற உள்ளதாகவும், அதனை சிறப்பாக நடத்தி ஐயப்ப பக்தர்களை சிறப்பிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது