1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 25 ஜூலை 2022 (18:13 IST)

மாணவிக்கு பாலியல் தொல்லை: சேலம் பெரியார் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் கைது!

arrested
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பொறுப்பு பதிவாளர் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
சேலம் பெரியார் பல்கலை ஆராய்ச்சி மாணவி ஒருவருக்கு அந்த பல்கலைக் கழகத்தின் பொறுப்பு பதிவாளர் கோபி என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது
 
இது குறித்து ஆராய்ச்சி மாணவி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் பொறுப்பு பதிவாளர் கோபி என்பவர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
மாணவியுடன் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட புகாரில் சேலம் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் கைது செய்யப்பட்டிருப்பது பல்கலைக்கழக வட்டாரங்களில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சமீபத்தில்தான்  சேலம் பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வில் ஜாதி குறித்த கேள்வி கேட்டதற்காக சர்ச்சையில் சிக்கியது என்பது குறிப்பிடத்தக்கது