திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 27 செப்டம்பர் 2021 (18:11 IST)

சேலம் சிறுமியின் மருத்துவ செலவை அரசே ஏற்கும்: முதல்வர் ஸ்டாலின்

சேலம் சிறுமியின் மருத்துவ செலவை அரசே ஏற்கும்: முதல்வர் ஸ்டாலின்
சேலத்தை சேர்ந்த ஜனனி என்ற சிறுமி இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருடைய சிகிச்சை செலவை அரசே ஏற்கும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சேலத்தை சேர்ந்த சிறுமி ஜனனி என்பவர் தனது இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தனது சிகிச்சைக்கு உதவ வேண்டும் என்றும் முதல்வரிடம் தொலைபேசி மூலம் பேசினார்
 
இதனை அடுத்து உடனடியாக அந்த சிறுமிக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் அளிக்க முதல்வர் உத்தரவிட்டார். இந்த நிலையில் தற்போது சிறுமி ஜனனி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இன்று ஸ்டான்லி மருத்துவமனை சென்ற முதல்வர் ஸ்டாலின் சிறுமியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவரது பெற்றோரிடம் சிறுமியின் மருத்துவ செலவு முழுவதையும் அரசே ஏற்கும் என்றும் தெரிவித்து விரைவில் சிறுமி முழு உடல் நலத்துடன் குணமாக வாழ்த்து தெரிவித்தார்