1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 17 ஜூலை 2020 (14:09 IST)

வாழ்த்து மழையில் நனைந்த சபரீசன் – ஸ்டாலின் குடும்பத்தில் இருந்து அடுத்த வாரிசா?

திமுக தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் பிறந்தநாளை ஒட்டி இன்று அவருக்கு கட்சி நிர்வாகிகள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

திமுக தலைவராக ஸ்டாலின் வருவதற்கு முன்னர் அவரின் தேர்தல் பிரச்சாரம் மற்றும் பிற நிகழ்ச்சிகளை கவனித்து வந்தவர் அவரது மருமகனான சபரீசன். இதனால் கட்சியினர் மத்தியில் அவருக்கு செல்வாக்கு இருந்து வந்தது. ஸ்டாலினை நெருங்கவேண்டும் என்பவர்கள் சபரீசன் மூலமாகவே செல்ல முடியும் என்ற சூழல் இருந்தது. இதனால் அவர் அரசியலுக்கு வரப்போகிறார் என நீண்டகாலமாக சொல்லப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வரும் சூழலில் திமுக நிர்வாகிகள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தும் அவரோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்தும் தங்கள் வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர். இதனால் இப்போது மீண்டும் சபரீசனின் அரசியல் வருகை குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.