திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 27 செப்டம்பர் 2021 (11:43 IST)

தனியார் பள்ளி வாகனங்கள் தரமானவையா? – சோதனை நடத்த அதிரடி உத்தரவு

தமிழகத்தில் செயல்படும் தனியார் பள்ளி வாகனங்களின் தரத்தை சோதிக்க உத்தரவு வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் ஏராளமான தனியார் பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில் அந்த பள்ளிகளில் பயிலும் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து செல்ல பள்ளி வாகனங்கள் பல உபயோகத்தில் உள்ளன.

இந்நிலையில் தனியார் பள்ளிகள் பயன்படுத்தும் வாகனங்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய போக்குவரத்து துறை கமிஷனர் சந்தோஷ் மிஸ்ரா, அனைத்து ஆர்.டி.ஓ-க்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் பள்ளி வாகனங்களின் தரம் மற்றும் அவை மாணவர்கள் பயணிக்க தகுதியானதா என்பது குறித்த சோதனை விரைவில் நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.