1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 24 செப்டம்பர் 2016 (17:49 IST)

கபாலி படத்தால் தமிழக அரசுக்கு ரூ.50 கோடி நஷ்டம்?: விரைவில் விசாரணை!

கபாலி படத்தால் தமிழக அரசுக்கு ரூ.50 கோடி நஷ்டம்?: விரைவில் விசாரணை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படம் வசூலில் பட்டையை கிளப்பியது. இந்த படத்துக்கு தமிழக வணிக வரித்துறை கேளிக்கை வரி விலக்கு அளித்துள்ளது. இதனால் தமிழக அரசுக்கு ரூ.50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் அதனை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி என்பவர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.


 
 
அவரது மனுவில், தமிழில் பெயர் வைக்கும், தமிழ் கலாச்சாரத்தை போற்றும் படங்களுக்கு தான் கேளிக்கை வரி ரத்து செய்ய வேண்டும். ஆனால் கபாலி படத்தில் தமிழ் கலாச்சாரத்தை போற்றும் காட்சிகள் எதுவும் இல்லை.
 
மேலும் கபாலி திரைப்படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக உள்ளது ஆனால் கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசுக்கு ரூ.50 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
 
எனவே கபாலி படத்தின் வரி விலக்கை ரத்து செய்து, அந்த பணத்தை தயாரிப்பாளர் தாணுவிடம் வசூலிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.