1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: புதன், 22 ஜூன் 2016 (18:25 IST)

ரூ.444க்கு விமான பயணம் - ஸ்பைஸ்ஜெட் அசத்தல் ஆஃபர்

ரூ.444க்கு விமான பயணம் - ஸ்பைஸ்ஜெட் அசத்தல் ஆஃபர்

வாடிக்கையாளர்களை குஷிப்படுத்த, ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், ரூ.444க்கு விமானத்தில் செல்லும் வாய்ப்பை வழங்கியுள்ளது.
 

 
இன்றைய நவீன உலகில் ரயில் பயணம், பேருந்து பயணம், கடல் பயணத்தை விட பலரும் விரும்புவது விமான பயணத்தையே. காரணம், பயண நேரம் குறைவதோடு, அடுத்த கட்ட வேலையை கவனிக்க ஏதுவாக உள்ளது.
 
இதனை கருத்தில் கொண்டு, இண்டிகோ நிறுவனம் ரூ.777க்கு விமானத்தில் பறக்கும் வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது.
 
இந்த நிலையில், மும்பை - கோவா, டெல்லி - டேராடூன் மற்றும் டெல்லி - அம்ரிட்சர், ஜம்மு - ஸ்ரீநகர், அகமதாபாத் - மும்பை ஆகிய வழித்தடங்களில் ரூ.444க்கு விமானத்தில் பறக்கும் வாய்ப்பை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.