1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 17 மே 2022 (13:52 IST)

கல்குவாரி விபத்து: ரூ.15 லட்சம் நிவாரண அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர்!

stalin
சமீபத்தில் நெல்லையில் நடந்த கல்குவாரி விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூபாய் 15 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
திருநெல்வேலி மாவட்டம், அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரியில் கடந்த மே 14ம் தேதி திடீரென மிகப்பெரிய பாறைகள் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் சிக்கிய இருவர் மீட்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர், ஆயர்குளத்தை சேர்ந்த முருகன் (வயது 23) மற்றும் இளையார்குளத்தை சேர்ந்த செல்வன் (வயது 25) ஆகிய இருவரும் உயிரிழந்துவிட்டனர் என்ற வேதனையான செய்தி கிடைத்துள்ளது.
 
உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தமிழக அரசின் சார்பாக தலா பத்து லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன். தொழிலாளர் நல வாரியம் மூலமாக தலா ஐந்து லட்சம் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு முதல்வரின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.